Tuesday, March 4, 2008

நம் கிறிஸ்து யேசுவின் ஞாபகார்த்தம்

20.03.2008 வியாழக்கிழமை
மாலை 6 மணிக்குப் பின்பு

நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
I கொரிந்தியர் 5 :7, 8

நமது கர்த்தருடைய ஞாபகார்த்தம், (பஸ்கா - நிசான் 14ம் தேதி) இந்த 2008 ஆண்டில் மார்ச் 20ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணியிலிருந்து ஆரம்பிக்கிறது. ஆகவே தேவ ஜனம் மார்ச் 20ம் தேதி வியாழக்கிழமை மாலை 6(ப்ம்) மணிக்குப் பின்பு ஞாபகார்த்தத்தை ஆசரிக்க வேண்டும். நீங்கள் தேவ ஜனமானால் இதனை ஆசரியுங்கள். ஆசரித்த பின்பு, ஆசரித்த விவரத்தை நாங்கள் அறிந்து உங்களோடு மகிழ்ச்சியடைய, அதனை உடனே எங்களுக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.

ஏழாம் தூதனுடைய சத்தம்

வெளி 10 அதிகாரம் 6.
இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,7. வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.